அத்தியாயம் 41

மாடசாமி வீட்டின் ஹாலில், சில நிமிடங்கள் கனத்த மவுனம் நிலவியது. ‘இவன் என்ன சொல்லுதான்
அத்தியாயம் 41

மாடசாமி வீட்டின் ஹாலில், சில நிமிடங்கள் கனத்த மவுனம் நிலவியது. ‘இவன் என்ன சொல்லுதான்?’ என்றார் பெரியப்பா எரிச்சலும் திகைப்புமாய். ‘டே, நம்மாளுகளுக்கு புத்தி போறாது கேட்டியா? எதுக்கும் இந்தம்மா சொல்லுற மாரி, லண்டனுக்கு அனுப்பி வைச்சி..’

லிண்டா திகைப்பில் உறைந்திருந்தாள். ‘ விக்ரம், மீண்டும் சரி பாருங்கள். ஒன்றும் அவசரமில்லை.

‘நிச்சயமாகச் சொல்கிறேன். இக்குண்டுகள் போலி’

‘எதை வைத்துச் சொல்கிறீர்கள்?’ என்றான் முத்துக்குமார் பேயறைந்த முகத்தைச் சமாளித்தவாறு.

‘லுக். இதில் இருந்தவை மார்க் 3 ரக குண்டுகள். வெப்லி மார்க் 4 துப்பாக்கிகள், 0.455 காலிபர், மார்க் 3 குண்டுகளை ஏற்றுக்கொள்ளும். இந்த மார்க் 3 ரக குண்டுகளின் இரு முனைகளிலும் வளைவான அரைக்கோள வடிவில் குழி இருக்கும். இது மிக மோசமாக, ஆட்களைக் கொல்கிற ஆற்றல் வாய்ந்தது என்பதால், 1899ல் தி ஹேக் மாநாட்டின் பின் இக்குண்டுகள் தடை செய்யப்பட்டன. மாறாக கூரான நுனியுடைய  மார்க் 2 குண்டுகள் 1900 முதல் மீண்டும் பயனுக்கு வந்தன. அவை 1912 வரை பயன்பாட்டில் இருந்தன. இதே காலத்தில் சில மார்க் 3 குண்டுகள் புழக்கத்தில் இருந்தன என்றாலும் அபூர்வமாகவே கிடைக்கும். இவற்றை எளிதில் சர்வீஸில் பயன்படுத்தி இருக்க முடியாது. எனவே, நீங்கள் சொன்ன காலக்கட்டத்தில் இக்குண்டுகள் பயன்பட்டிருக்க முடியாது.’

‘என்ன சொல்ல வர்றீங்க? இதை யாரோ மாத்தியிருக்காங்கன்னா?’ பெரியப்பா கிட்டத்தட்ட இரைந்தார்.

‘இருக்கலாம். லுக் ஓல்ட் மேன். என் மீது கத்தாதீர்கள். என் அறிவுக்குப் பட்டதைச் சொன்னேன். மற்றபடி, இது உங்க தலைவலி’ விக்ரம் முகம் சிவந்து எழுந்தார்.

‘சாரி, சாரி, அவருக்கு என்னமோ டென்ஷன். மன்னிச்சுக்குங்க’ என்றார் மாடசாமி பதறி.

‘வேற குண்டுகள்னா, இந்த துப்பாக்கியில எப்படி கச்சிதமா பொருந்தி இருந்துச்சு?’ முத்துக்குமார் கவலையுடன் கேட்டான்.

‘மார்க் 2, மார்க் 3ம் ஒரே அளவுதான். இரண்டிற்கும் எடையிலதான் வேறுபாடு உண்டு. ரெண்டும் தர்றேன். நீங்களே பாருங்க.’ என்ற விக்ரம் தன் தோல் பையிலிருந்து சில குண்டுகளை எடுத்து கவனமாக மேசையின் ஒரு ஓரமாக வைத்தார்.

முண்டியடித்துக்கொண்டு வந்தவர்கள், ஒரு வரிசையாக ஒதுங்கி, இரு குண்டுகளையும் அருகருகே பார்த்தார்கள். ஒன்று நீண்ட கூர் நுனியுடனும் மற்றது தட்டையான நுனியில் ஒரு குழியுடனும் இருந்த்து.

‘எனவே, என் முடிவு இதுதான். இந்த துப்பாக்கி அந்தக் காலத்து வெப்லி. சந்தேகமில்லை. ஸ்பெஷலாக செய்யப்பட்டது. உறுதி. குண்டுகள் வேறு காலத்தவை- அதுவும் உறுதி’

லிண்டாவின் செல்போன் ஒலித்தது. அவர்கள் சொல்லாமலே புரிந்துகொண்டார்கள். இங்கிலாந்திலிருந்து அழைப்பு.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com