ஒரே நாளில் ரூ.53 ஆயிரம் கோடிக்கு 500, 1000 நோட்டுகள் "டெபாசிட் செய்யப்பட்டுள்ளது: அருந்ததி பட்டாச்சார்யா 

ரூ.53,000 கோடி "டெபாசிட்': பாரத ஸ்டேட் வங்கிகளில் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை சுமார் ரூ.53 ஆயிரம் கோடிக்கு
ஒரே நாளில் ரூ.53 ஆயிரம் கோடிக்கு 500, 1000 நோட்டுகள் "டெபாசிட் செய்யப்பட்டுள்ளது: அருந்ததி பட்டாச்சார்யா 

புதுதில்லி

ரூ.53,000 கோடி "டெபாசிட்': பாரத ஸ்டேட் வங்கிகளில் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை சுமார் ரூ.53 ஆயிரம் கோடிக்கு 500, 1000 நோட்டுகள் "டெபாசிட்' செய்யப்பட்டு இருப்பதாக அதன் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

இதுதொடர்பாக, மும்பையில் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: நாடு முழுவதுமுள்ள பாரத ஸ்டேட் வங்கிகளில் வியாழக்கிழமை ரூ.31 ஆயிரம் கோடியும், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை ரூ.22 ஆயிரம் கோடியும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

பழைய நோட்டுகளுக்கு பதிலாக சுமார் ரூ.1500 கோடிக்கு பணத்தை மாற்றிக் கொடுத்துள்ளோம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக, எங்களது வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் எங்களது வங்கிகளின் 29,000 ஏடிஎம்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 21,000 ஏடிஎம்கள் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com