ராமாவரத்தில் எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு: காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.10 லட்சம் அளித்தார் சசிகலா

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட
அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய கட்சியின் பொதுச்செயலர் வி.கே.சசிகலா.
அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய கட்சியின் பொதுச்செயலர் வி.கே.சசிகலா.

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட அவரின் சிலையை அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

       அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு சசிகலா சென்றடைந்தார். ராமாவரம் தோட்டத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அதிமுக கொடியை அவர் ஏற்றி வைத்தார்.

         இதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் உருவச் சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., அவரது தாயார் சத்யா, மனைவி ஜானகி ஆகியோரது நினைவு மண்டபங்களில் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அங்கு தேநீர் அருந்தினார்.

       கருத்தரங்கு தொடக்கம்: எம்.ஜி.ஆர்., சிலை, நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிறகு நூற்றாண்டு தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் சசிகலா பங்கேற்றார். டாக்டர் எம்.ஜி.ஆர்., பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்ல மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார்.

      எம்.ஜி.ஆரின் உறவினர் லதா ராஜேந்திரன் கருத்தரங்குக்கு வந்திருந்தோரை வரவேற்றார். காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணரான டாக்டர் மோகன் காமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார். பேச்சு-காது கேளாதோர் இல்ல மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காக நமது எம்.ஜி.ஆர்., பெஸ்ட் நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

   இந்தப் பள்ளியின் மாணவ-மாணவிகளுக்கு கேக் வழங்கியதுடன், 165 பேருக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான 256 காதொலிக் கருவிகளை அளித்தார். அதேபோன்று, மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளையும் வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா நன்றி தெரிவித்தார்.

        குழு புகைப்படம்: இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாணவ-மாணவிகளுடன் சசிகலா குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்களுக்கு அறுசுவை உணவுகளை அவர் ஊட்டி விட்டு அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். இதைத் தொடர்ந்து, அங்கியிருந்து புறப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com