அரசியலுக்கு வருவதற்கான அவசரம் தற்போது இல்லை: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

அரசியலில் நுழைவதற்கு தற்போது எந்த அவசரமும் இல்லை என்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
அரசியலுக்கு வருவதற்கான அவசரம் தற்போது இல்லை: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

சென்னை: அரசியலில் நுழைவதற்கு தற்போது எந்த அவசரமும் இல்லை என்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் உரையாற்றும் போது, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. நான் அரசியலுக்கு வருவது "கடவுள் விருப்பம்" என்றால் அரசியலின் பாதையை அவர் தேர்ந்தெடுப்பார் என்றார். "ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் முடிவு செய்கிறார். இப்போது, ​​அவர் என்னை ஒரு நடிகர் ஆக விரும்புகிறார் மற்றும் நான் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன். கடவுள் விரும்பினால், நான் நாளை அரசியலில் நுழைவேன். நான் நுழைந்தால், மிகவும் உண்மையாக இருப்பேன், பணம் சம்பாதிப்பதில் குறிக்கோளாக உள்ள மக்களை மகிழ்விக்க மாட்டேன். நான் அத்தகைய மக்களுக்காக வேலை செய்ய மாட்டேன் என்றதுடன் "போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்" என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இதையடுத்து அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவருடைய நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அவசியம் என்ன என்பது குறித்த மாநாட்டை தமிழருவி மணியன் திருச்சியில் நடத்தினார்.

இந்நிலையில், வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினி தனது பிறந்தநாளில் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் பிறந்தநாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்தில் நேற்று தனது இஷ்ட தெய்வமான ராகவேந்திரரை வணங்குவதற்காக சென்றிருந்தார். அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெறுவதற்கா மந்த்ராலயம் சென்றுள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய ரஜினியிடன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 
அரசியல் களத்தில் நுழைவதற்கு தற்போது எந்த அவசரமும் இல்லை என்று கூறினார். எனது பிறந்த நாளான வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ரசிகர்களைச் சந்திப்பேன் என்று கூறியவர் "காலா" படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என்று தெரிவித்தார். 

ரஜினிகாந்த் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பான எதிர்பாப்ப்பு நிலவிவந்த நிலையில், தற்போது எந்த அவசரமும் இல்லை என்று ரஜினி கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com