நடிகை ஸ்ரீதேவி : நாம் அறிந்ததும் - அறியாததும்

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக, 54 வயதில் மரணமடைந்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி : நாம் அறிந்ததும் - அறியாததும்

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக, 54 வயதில் மரணமடைந்துள்ளார்.

தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிரஞ்சீவி மற்றும் ரிஷிகபூர் என இந்திய சினிமாவில் பல உச்சநட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.

பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி, 2012 ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன்பின், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அவரைப் பற்றி நாம் அறிந்த மற்றும் அறியாத சில தகவல்கள் இதோ: -

பிறப்பு - அறிமுகம்

1963ம் ஆண்டு சிவகாசியில் உள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, 1967-ஆம் ஆண்டு தமது 4 வயதில் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  நடிகைகளில் சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற ஸ்ரீதேவியின் உண்மையான பெயர் "ஸ்ரீ அம்மா". பின்னர் சினிமாவிற்காக அந்தப் பெயரை ஸ்ரீதேவி என மாற்றிக்கொண்டார். 1979ம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் 13 வயதில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் மாஸ் ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் ஜோடி போட்டு ஹீரோக்களுக்கு நிகரான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார்.

முதல் விருது

1971-ஆம் ஆண்டில் பி.கே.பொற்றேகாட் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான பூம்பட்டா என்ற
படம், சிறுமி ஸ்ரீதேவியை பிறவிக் கலைஞராக அடையாளம் காட்டியது. அதில் சிற்றன்னையின்
கொடுமைக்கு ஆளாகி மீளும் சாரதா என்ற சிறுமியாக முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்று
நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதை 8 வயதில் பெற்றார்.

பாடகராக பரிமாணம் பெற்ற ஸ்ரீதேவி

நடனம், நகைச்சுவை என பன்முகம் கொண்ட ஸ்ரீதேவி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை ரீமேக் திரைப்படமான சத்மா -வில் ஒரு பாடலை பாடினார். இதே திரைப்படத்தில் இந்தியில் தனது சொந்த குரலில் முதல் முறையாக வசனம் பேசினார். இதைத் தொடர்ந்து சாந்தினி, கராஜ்னா, தெலுங்கு படமான க்ஷ்ணம் க்ஷ்ணம் ஆகிய படங்களிலும் ஸ்ரீதேவி பாடியுள்ளார்.

ஸ்ரீதேவிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்களில் நடிக்க அவர் முதலில் தேர்வு செய்யப்படவில்லை. நாகினா என்ற படத்திற்கு முதலில் ஜெயபிரதாவும், சாந்தினி திரைப்படத்திற்கு ரேகாவும் முதலில் அணுகப்பட்டனர். அவர்கள் மறுத்ததால் அந்த வாய்ப்புகள் ஸ்ரீதேவிக்கு கிடைத்தன. தன்னுடைய 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், 4 முறை சிறந்த நடிப்புக்காக பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அதோடு, பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் தமிழில் வெளிவந்த திரைப்படங்கள்:-

  • துணைவன்    
  • நம்நாடு    
  • பாபு     
  • கனிமுத்து பாப்பா    
  • வசந்த மாளிகை    
  • பாரதவிலாஸ்    
  • திருமாங்கல்யம்      
  • மூன்று முடிச்சு    
  • 16 வயதினிலே    
  • காயத்ரி     
  • கவிக்குயில்
  • சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு    
  • வணக்கத்துக்குரிய காதலியே  
  • டாக்சி டிரைவர்
  • இது எப்படி இருக்கு    
  • மச்சான பாத்தீங்களா     
  • மனிதரில் இத்தனை நிறங்களா    
  • முடிசூடா மன்னன்      
  • வைலட் பிரேம்நாத்    
  • சிகப்பு ரோஜாக்கள்  
  • ப்ரியா  
  • தர்மயுத்தம்
  • கல்யாணராமன்
  • பகலில் ஓர் இரவு      
  • கவரிமான்     
  • நீலமலர்கள்     
  • பட்டாக்கத்தி பைரவன்     
  • லக்ஷ்மி     
  • தாயில்லாமல் நானில்லை     
  • குரு    
  • ஜானி    
  • வறுமையின் நிறம் சிகப்பு    
  • விஸ்வரூபம்    
  • பாலநாகம்மா     
  • சங்கர்லால்     
  • மீண்டும் கோகிலா      
  • ராணுவவீரன்    
  • மூன்றாம் பிறை    
  • தனிக்காட்டு ராஜா    
  • போக்கிரிராஜா    
  • வாழ்வே மாயம்    
  • அடுத்த வாரிசு    
  • சந்திப்பு      
  • நான் அடிமை இல்லை    
  • இங்கிலீஷ் விங்கிலீஷ்     
  • புலி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com