துருக்கியில் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு 

துருக்கியில் முதல் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
துருக்கியில் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு 

அங்காரா (துருக்கி): துருக்கியில் முதல் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூகானில் முதல் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சீனாவில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் குணமடைந்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  

சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. மேற்கண்ட நாடுகள் கடுமையான சோதனை சந்தித்து வருகின்றன. 

இந்த நிலையில் சமீபத்தில் ஐரோப்பா சென்றுவிட்டு துருக்கி திரும்பி ஒருவருக்கு கரனோ வைரஸ் தொற்று பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் கோகா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com