சூப்பர் டேஸ்ட்டி இட்லி மிளகாய்ப் பொடி தயாரிப்பது எப்படி?

 வெறும் வாணலியில் மிதமான சூட்டில் கறுப்பு எள், பூண்டு மற்றும் மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும்.
சூப்பர் டேஸ்ட்டி இட்லி மிளகாய்ப் பொடி தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

நன்கு உலர்ந்த மிளகாய் வற்றல் – 8 (பெரியது)
பூண்டு - தேவைக்கேற்ப
கறுப்பு எள் – 100 கிராம்
உளுந்தம் பருப்பு & கடலைப் பருப்பு – 150 கிராம்
பெருங்காயப் பொடி – ஒரு டீஸ்பூன்
காய வைக்கப்பட்ட கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

மிளகாய் வற்றலின் காம்புகளை நீக்கி மிதமான வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். 

கறிவேப்பிலையை நீரில் அலசி தனித்தனி இலைகளாக உருவி காய வைத்து எடுத்து தனியாக வைக்கவும். 

வெறும் வாணலியில் மிதமான சூட்டில் கறுப்பு எள், பூண்டு மற்றும் மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும்.

எள் பொறிந்து வெடிக்கும் சமயத்தில் வாணலியில் இருந்து எள்ளினையும், மிளகாய் வற்றலையும் வெளியே எடுத்து வைக்கவும். அதன் பிறகு உளுந்தை அதே வாணலியில் போட்டு வறுக்கவும்.

உளுந்து வறுபட்ட வாசனை வந்த பின் வாணலியில் இருந்து தனியே கொட்டி விடவும். அதன் பின் கடலைப் பருப்பை வறுக்கவும்.

கறிவேப்பிலையை போட்டு நன்கு சுருளும் வரை வதக்கவும். தொடர்ந்து அடுப்பை சிம்மிலேயே வைத்திருக்கவும். வறுத்த அனைத்துப் பொருட்களை நன்கு ஆற வைக்கவும்.

மிக்ஸியில் சிறிதளவு உளுந்தம் பருப்பு, சிறிதளவு எள், மீண்டும் சிறிதளவு உளுந்து மறுபடியும் எள் என மாறி மாறி போடவும்.

அதனுடன் வறுத்த மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, தேவையான உப்பு, பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். மிகவும் பொடிந்து போகாமல் சற்று கொரகொரப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். சூப்பர் டேஸ்ட்டி இட்லிப் பொடி தயார். 

இட்லி மிளகாய்ப் பொடியுடன் நல்ல எண்ணெய் குழைவாக ஊற்றி இட்லி அல்லது தோசையுடன் சாப்பிடும் போது அதன் சுவைக்கு ஈடு இணை இருக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com