200 கோடி பயனாளிகளை அடைந்து ஃபேஸ்புக் புதிய சாதனை! 

அக்டோபர் 2012-ல் 100 கோடி பயனர்களை எட்டிய ஃபேஸ்புக், கடந்த மார்ச் 31-ல் மேற்கொள்ளப்பட்ட
200 கோடி பயனாளிகளை அடைந்து ஃபேஸ்புக் புதிய சாதனை! 

தினமும் காலையில் எழுந்த உடன் பலர் கண்ணாடியில் தான் விழிப்பார்கள். அல்லது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களின் முகத்தில் விழிப்பார்கள். அல்லது பசு மாட்டை முதலில் பார்ப்பார்கள். ‘யார் முகத்தில முழிச்சேனோ, இன்னிக்கு இந்த பாடு பட்டுட்டு இருக்கேன்’ என்றும் ‘இன்னிக்கு அவன் நரி முகத்துல விழிச்சிருக்கான் போல இவ்வளவு அதிர்ஷ்டம்’என்று விழிப்பதைப் பற்றிய பல விஷயம் பரவலாகப் பேசப்படும். ஆனால் இன்றைய நிலை இதற்கு தலை கீழ். பெரும்பாலான மக்கள் விழிப்பது மற்றவர்களின் முகங்களில் அல்ல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் தான். இப்படி உலக மக்கள் தொடர்ந்து தந்த ஆதரவில் தற்போது ஃபேஸ்புக் 200 கோடி மாதாந்திர பயனர்களை எட்டியுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை அதுதான். இந்த சாதனைக் கதையை சுருக்கமாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 2012-ல் 100 கோடி பயனர்களை எட்டிய ஃபேஸ்புக், கடந்த மார்ச் 31-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 194 கோடி ஃபேஸ்புக் பயனர்கள் இருந்தனர். தற்போது உலகம் முழுவதும், பேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கையானது 200 கோடியை எட்டிவிட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். தன் நிறுவனத்தில் புதிய கொள்கை வாசகத்தையும் அறிவித்தார். அது உலகத்தை இன்னும் நெருக்கமாக ஒன்றிணைப்போம்’ என்பதாகும்

பிப்ரவரி 4, 2004 ஆண்டில் தனது, மூன்று நண்பர்களுடன் இணைந்து, அமெரிக்க கல்லுாரி மாணவர்களுக்காக, 'ஃபேஸ்புக்' என்னும் சமூக வலைதளத்தை, மார்க் ஜுக்கர்பெர்க் துவங்கினார். முதல் ஆண்டிலேயே இந்த வலைதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியது. அதன் பின் உலகம் முழுவதும் இதன் பயன்பாடு அசுர வேகத்தில் பரவியது. 2009-ம் ஆண்டு 100 கோடி பயனர்களை எட்டியது ஃபேஸ்புக். இதன் பயனர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளனர்.

இத்தகைய அபார வளர்ச்சிக்குக் காரணம் வளரும் நாடுகளில் ஃபேஸ்புக் பயன்பாட்டை அதிகரிக்கும் புதுப் புது யுக்திகளை இந்நிறுவனம் கடைபிடித்தது வருகிறது. குறைந்தளவு டேட்டாவை பயன்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் லைட் என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியதால் மொபைல் போனில் இதை எளிதாகத் தரவறக்கம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. தவிர அதில் பல செயலிகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. பயனாளர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு 'பர்சனல் டச்’ இருப்பதையும் கவனமாக கையாள்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் 13 ஆண்டுகளில், 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட, கிட்டத்தட்ட ஐம்பது நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது இதன் பயனாளிகளின் எண்ணிக்கை 200 கோடியை எட்டிவிட்டதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதர சமூக வலைதளங்களைப் பொருத்தவரை 2017-ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் ட்விட்டர் 32.8 கோடி மாதாந்திர பயனாளிகளையும் 'ஸ்னாப்ஷாட்' 16.6 கோடி பயனாளிகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com