ஐ10 கார் உற்பத்தியை நிறுத்தியது ஹுண்டாய்!

தென்கொரியவைச் சேர்ந்த ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் பிரபல மாடலான ஐ10 உற்பத்தியை நிறுத்தியது. நவீனரகம் மற்றும் அதிக வசதிகளைக் கொண்ட கார்களின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியதையடுத்த
ஐ10 கார் உற்பத்தியை நிறுத்தியது ஹுண்டாய்!

தென்கொரியவைச் சேர்ந்த ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் பிரபல மாடலான ஐ10 உற்பத்தியை நிறுத்தியது. நவீனரகம் மற்றும் அதிக வசதிகளைக் கொண்ட கார்களின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியதையடுத்து, ஹுண்டாய் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உயரதிகாரி தெரிவித்ததாவது:

ஹுண்டாய் மோட்டார் இந்தியா முதன்முதலாக சிறிய ரக பிரிவில் ஐ10 மாடல் காரை கடந்த 2007-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. உள்நாடு மற்றும் வெளிநாடு என இப்போது வரை அந்த மாடலைச் சேர்ந்த 16.95 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் வலுவாக காலூன்ற இந்த மாடலின் அறிமுகம் பேருதவி புரிந்தது.

தற்போதைய நிலையில், வாடிக்கையாளர்களின் கவனம் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பிரீமியம் வகை கார்களின் பக்கம் திரும்பியுள்ளது. இதனை உணர்ந்து, ஏற்கெனவே ஐ10 கார்களுக்கு மாற்றாக கிராண்ட் ஐ10 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, பழைய ஐ10 மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர். இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக ஹுண்டாய் திகழ்கிறது. இந்த நிறுவனம் பிரிமியம் பிரிவில் அதிக தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

2017-20-ஆம் ஆண்டுக்குள் எட்டு புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்ய ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. அதில் மூன்று தயாரிப்புகள் முற்றிலும் புதியவை. எஞ்சியுள்ள தயாரிப்புகள் தற்போதிருக்கும் மாடல்களின் புதிய பதிப்புகளாக வெளிவரவுள்ளவை.

ஹைபிரிட் வகை கார் தயாரிப்பில் அதிக பங்களிப்பை வழங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டில் அப்பிரிவில் "ஐயோனிக்' மாடல் காரை அறிமுகம் செய்யவுள்ளது.

சுற்றுச்சுழல் மாசுபாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வரும் நிலையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் வாகனங்களை உற்பத்தி செய்யவும், அத்தகைய தயாரிப்புகளுக்கு அரசிடமிருந்து ஊக்குவிப்பு சலுகைப் பயன்களை பெறவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹுண்டாயின் ஹைபிரிட் ரக கார்கள் இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com