வள்ளிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

பிரசித்தி பெற்ற வள்ளிமலை மலையடிவாரக் கோயிலான ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.
நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள வள்ளிமலை அடிவாரம் ஆறுமுகநாதர் திருக்கோயில் கோபுரங்கள்.
நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள வள்ளிமலை அடிவாரம் ஆறுமுகநாதர் திருக்கோயில் கோபுரங்கள்.

பிரசித்தி பெற்ற வள்ளிமலை மலையடிவாரக் கோயிலான ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்துக்கு உள்பட்ட வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மலை மீது அமைந்துள்ள குடவறைக் கோயில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியாகவும், மலையடிவாரக் கோயிலில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக நாதராகவும் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறை, வனத்துறை, தொல்லியல் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளன.
27 ஆண்டுகளுக்கு பிறகு மலையடிவாரக் கோயில் நுழைவு வாயிலின் மீது அமைந்துள்ள ஐந்துநிலை ராஜகோபுரம் மற்றும் வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, கருவறைக் கோயில் விமான கோபுரத்துக்கும் வியாழக்கிழமை (பிப்ரவரி 9) காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விழாவில் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும், விழாக் குழுவினர்களும் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com