யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற கொடியேற்றம்.
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற கொடியேற்றம்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் பங்குனி மாதம் நடைபெறும்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கடந்த 17-ஆம் தேதி கடைவெள்ளி உற்சவமும், 18-ஆம் தேதி செல்வர் உற்சவமும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மார்ச் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பங்குனி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை வியாழக்கிழமை காலை 6 மணியளவில் நடைபெறும். இதில், யதோக்தகாரி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மார்ச் 27-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். அன்று காலை 6 மணியளவில் உற்சவர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மார்ச் 30-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை நல்லப்பா பாஷ்யகாரர் பரம்பரை தர்மகர்த்தாக்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com