70 ஆண்டுகளுக்கு பிறகு சக்கரபாணி சுவாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது.
70 ஆண்டுகளுக்கு பிறகு சக்கரபாணி சுவாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது.
 ஜலந்தராசுரன் எனும் அசுரனை அழிக்கும் பொருட்டு மகாவிஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட சுதர்சன சக்கரம், அசுரனை அழித்தபின்பு கும்பகோணம் நகரில் காவிரியின் தென்கரையில் பூமியை பிளந்து வெளிபட்டு, காவிரி நதிக்கரையில் பிரம்மனின் கையில் வந்து அமர்ந்தது. பிரம்மா சக்கரத்தை நதிக்கரை அருகிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
 அந்தச் சக்கரமானது சூரியனின் ஒளியை விட பல மடங்கு பிரகாசமாய் ஒளிர்ந்தது. அதனைக்கண்டு சூரியன் , சக்கரத்தின் ஒளியைவிட சூரியன் தன் ஒளியை அதிகமாக கூட்டினார்.
 சூரியனின் கர்வத்தை அடக்க சக்கரமானது தனது பேரொளியை விடுவித்து சூரியனின் ஒளியை தன்னுள் அடக்கியது.
 ஒளியிழந்த சூரியன் தனது தவறை உணர்ந்து தனக்கு மீண்டும் ஒளி கிடைக்கவும், இத்தலம் தனது பெயரால் பாஸ்கர சேத்திரம் என வழங்கப் பெற வேண்டும் என வேண்ட சுவாமி சக்கரத்திலிருந்து சக்கரபாணி சுவாமியாக சூரியனுக்கு காட்சி தந்து அருளினார் என்பது ஐதீகம்.
 அதன்படி, வரம் கிடைக்கப்பெற்ற சூரியன் சக்கரபாணி சுவாமிக்கு அவ்விடத்திலேயே கோயில் நிர்மாணம் செய்து வழிபட்டு வரலானான்.
 சக்கரபாணி சுவாமியை சூரியன், பிரம்மன், மார்கண்டேயன், அகிர்புதன்ய மகரிஷி, அக்னிபகவான் ஆகியோர் வழிபட்ட தலம்.
 வேறு எங்கும் இல்லாதவகையில் இக்கோயிலில் செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி மற்றும் குங்குமம் ஆகிய பொருள்கள் கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.
 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
 மாலை ஸ்ரீவிஜயவல்லி ஸ்ரீ சுதர்சன வல்லி தாயாருடன் சக்கரபாணி சுவாமி உள் வீதி புறப்பாடும், 6 மணிக்கு படியேற்ற சேவையும், 6.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவ ஆராதனமும், 7 30 மணிக்கு நாமசங்கீர்த்தனமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com