கூத்தனூர் சரஸ்வதி கோயில் கும்பாபிஷேகம்

கூத்தனூர் அருள்மிகு சரஸ்வதி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூத்தனூர் சரஸ்வதி கோயில் கும்பாபிஷேகம்

கூத்தனூர் அருள்மிகு சரஸ்வதி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே கூத்தனூரில் கல்விக்குரிய தெய்வமான சரஸ்வதிக்கென தனிக்கோயில் அமைந்துள்ளது.
 பிரம்மனுக்கும், சரஸ்வதிக்கும் ஏற்பட்ட தகராறில் இருவரும் தங்களுக்குள் சாபம் இட்டுக்கொள்ள, இருவரும் பூலோகத்தில் சகோதர உறவு முறையில் பிறக்கின்றனர்.

திருமண வயதின்போது, தாங்கள் யார் என்பது இருவருக்கும் தெரியவர, சரஸ்வதி சிவபெருமானை நோக்கி தவம் செய்ததன் விளைவாக, தனிக்கோயிலுடன் இருக்குமாறு சரஸ்வதிக்கு சிவபெருமான் வரமளித்தார் என்பது இக்கோயிலின் தல வரலாறு.

பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் முன்பு, இக்கோயிலுக்கு அழைத்து வந்து வழிபட்டு சென்றால், குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, இங்கு நடைபெறும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இத்தகைய சிறப்புவாய்ந்த சரஸ்வதி கோயிலில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவுபெற்றதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாகசாலை பூஜைகள் கடந்த புதன்கிழமை (ஜூன் 27) தொடங்கின. வியாழக்கிழமை 2 மற்றும் 3- ஆம் கால யாகசாலை பூஜைகளும், வெள்ளிக்கிழமை 4 மற்றும் 5-ஆம் கால யாகசாலை பூஜைகளும், சனிக்கிழமை 6 மற்றும் 7-ஆம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) காலை 8-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுபெற்றதும், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, விமான கலசங்களுக்கு 10.30 மணிக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com