

தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள வராகி அம்மனுக்கு 11 நாள்கள் நடைபெறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி, காலையில் கணபதி ஹோமமும், சிறப்பு யாகமும் நடைபெற்றன. பின்னர், வாராஹி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலையில் வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழா நாள்களில் நாள்தோறும் காலையில் யாகமும், மாலையில் வாராஹி அம்மனுக்கு அலங்காரமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
வாராஹி அம்மனுக்கு இன்று மஞ்சள் அலங்காரமும், சனிக்கிழமை குங்கும அலங்காரமும் செய்யப்படவுள்ளது. வரும் 15-ம் தேதி சந்தன அலங்காரமும், 16-ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 17-ம் தேதி மாதுளை அலங்காரமும், 18-ம் தேதி நவதானிய அலங்காரமும், 19-ம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 20-ம் தேதி கனிவகை அலங்காரமும், 21-ம் தேதி காய்கறி அலங்காரமும், 22-ம் தேதி புஷ்ப அலங்காரமும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.