கேமராவுக்கு சவால்: ஒளிப்பதிவாளர் கர்ணன்

முதன் முதலில் நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய படம் 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்' .இது வெளிவந்து 25 வருடங்கள் ஆகிறது.
கேமராவுக்கு சவால்: ஒளிப்பதிவாளர் கர்ணன்

முதன் முதலில் நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய படம் 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்' .இது வெளிவந்து 25 வருடங்கள்  ஆகிறது. இந்தத் துறையில் நன் ஈடுபட்ட நாளில் இருந்து இதுவரை கேமரா கோணங்களில் பல புதுமைகளை  செய்திருக்கிறேன்.  சில அதிசய நிகழ்ச்சிக்களும் படப்பிடிப்பின் போது  நடந்திருக்கிறது. அவைகளி ல் குறிப்பிடத்தகுந்தது "தங்க ரத்தினம்"

மகாபலிபுரத்தில் இதன் வெளிப்புறப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி கரையோரமாக நின்று கொண்டு டூயட் பாடுவது போல ஒரு சீன  எடுக்க  வேண்டும். பொதுவாகவே கடல் அலைகள்  ஒரு பக்கமாக விரைந்து வந்து, கரையைத் தொட்டு  , மீண்டும் அதே மாதிரி திரும்பி போவதுதான் இயற்கையாக் நடந்து வருகிற பழக்கம். ஆனால் இரு புறமும் அலைகள் கூடி வந்து. கைக்கு எட்டாத  அளவுக்கு, உயரே எழுந்து வந்து மோதிக் கொள்ளுவது  ரொம்பவும் அபூர்வமான நிகழ்ச்சி. அத்தி பூத்தாற் போல என்று கூட சொல்லலாம்.

பாட்டுக்கு தகுந்த மாதிரி நட்சத்திரங்களை நிற்க வைத்து  ஷாட் எடுத்துக் கொண்டு இருந்தேன். நாயகனும் நாயகியும் நெருங்கி வந்து நின்ற போது , திடீரென்று கடல் அலைகள்  நான் சொன்னது போல் மேலே உயரே உயரே எழுந்து ஒன்றோடு ஒன்று மோதிக்  கொண்டன . எனக்கு ஒரு வியப்பு. எப்படி இது நடந்ததென்று? படப்பிடிப்பு முடிந்து , 'ரஷ்' போட்டு பார்த்தோம்.  மிகப் பிரமாதமாக இந்த் பாடல் காட்சி அமைந்திருந்தது? எப்படி இந்த ஷாட் அமைத்தீர்கள் என்று கேட்போர்கள்தான் இன்று ஜாஸ்தி. இதன் பின் எத்தனையோ படங்களுக்காக கடல் பக்கமாக சென்றிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அலைகள் அந்த மாதிரி உயரே எழுந்ததாய் பார்க்கவே முடியவில்லை. 

பேட்டி: மு.சிவாஜி

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.08.81 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com