சில படங்கள்  வெளிவராமல் பதுங்கி கொண்டன 

விஜயசாந்தி
சில படங்கள்  வெளிவராமல் பதுங்கி கொண்டன 

பாரதிராஜாவின் அறிமுகங்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். முதல் படத்திலேயே பெரும் புகழையும் பெற்று,  மிக்க குறுகிய காலத்திலேயே பிஸியாகி விடுவார்கள். இது முதல் ராகம்.பாக்யராஜ், ரத்தி அக்னிஹோத்ரி, ராதிகா, கார்த்திக், ராதா...ஆகியோர் முதல் இன்றைய பாண்டியன் ராதா வரை இந்த ரகத்தை சேர்ந்தவர்கள்.  

சில அறிமுகங்கள் தமிழில் வேகமான வளர்ச்சி இல்லாவிட்டாலும் பிற மொழிகளில் புகுந்து கொண்டார்கள். விஜயசாந்தி, அருணா போன்றவர்கள் இந்த இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர்கள்.

சமீபத்தில் ஒருநாள் வாஹிணி ஸ்டூடியோவில் ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் விஜயசாந்தியைச் சந்தித்தேன்.நிலைக் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு மவுனியாய் மனக்குமுறல்களை கண்ணீர்த்துளிகள் மூலம் வெளிப்படுத்த வேண்டிய உணர்ச்சிகரமான காட்சியை படமாக்கி கொண்டிருந்தார்கள்.

'நிழல் தேடிய நெஞ்சங்கள்' தோல்விப்படமாக இருந்தாலும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்றால் அது மிகையில்லை.

நீங்கள் நடித்துள்ள தமிழ்ப்படங்களில் உங்களது நடிப்பை பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் தமிழில் உங்களுக்கு  தொடர்ந்து வாய்ப்பு வரவில்லையே ஏன்? என்று விஜயசாந்தியிடம் கேட்டேன்.

அவர் சொன்னார். "நீங்கள்தான் அதற்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து சொல்ல வேண்டும். 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் டைரக்டர் பாரதிராஜா அவர்கள் துடுக்குத்தனமாக  பேசும்-மனதில் நிற்கக்  கூடிய காரெக்டரில் அறிமுகம் செய்தார். பொதுவாக பாரதிராஜா அறிமுகம் என்றால் யாராகவிருந்தாலும் முதல்படம் வெளிவரும் முன்னே 'ஏகப்பட்ட வாய்ப்புகள்' வெளியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.

ஆழமான கதைகளில் அழுத்தமான கேரக்டர் கிடைத்தால் படம் பார்ப்பவர் மனதில் நிலைத்து நிற்காமல் போய்  விடுமா?எதிர்பார்த்த பெயர் புகழ் கிடைத்தது. தொடர்ந்து படங்களும் வெளிவந்தன. ஆனால் சில படங்கள்  வெளிவராமல் பதுங்கி கொண்டன. வெளிவந்த சில படங்கள் வெற்றி பெறாததால் எனக்கு தமிழில் போதிய வாய்ப்புகள் வரவில்லை என்றுதான் என்ன வேண்டியிருக்கிறது.

தெலுங்கு படங்களில் இன்னும் எனக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. தெலுங்கில் எல்லா நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறேன் என்கிறார் விஜயசாந்தி. . 

ரா

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.05.84 இதழ்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com