பெயரெடுக்க வேண்டுமானால் பாடுபட்டுதான் ஆக வேண்டும்

சத்யராஜுடன் ஒரு உரையாடல்
பெயரெடுக்க வேண்டுமானால் பாடுபட்டுதான் ஆக வேண்டும்

நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் போலந்து தூதர் அலுவலகம் இருக்கும் வீட்டில் குடியிருக்கிறார் வில்லன் சத்யராஜ். அவருடன் ஒரு உரையாடல்.

'நூறாவது நாள்' படத்தில் நாள் நடிப்பதற்காக மொட்டை அடித்தேன், கேரக்டர் அப்படி என்றார் சத்யராஜ். 'நூறாவது நாளை'த் தவிர நான் நடித்துள்ள 'பொழுது விடிஞ்சாச்சு' , 'சிரஞ்சீவி' , 'புண்ணியம் கோடி புருஷூடு (தெலுங்கு)'  போன்ற படங்களும் ஒரே சமயத்தில் ரிலீசாகின்றன' என்றார்.

'நான் மகன் அல்ல' படத்தில் நான் வெள்ளி ஊசியினால் பல் குத்துவது போலவும் அதனால்முக்கிய வழக்கில் சிக்குவது போலவும் காட்சி வருகிறதல்லவா? உண்மையிலேயே எனக்கு அந்த வழக்கம் உண்டு. தற்செயலாகத்தான் அந்த காட்சி  படத்தில் அமைந்தது என்று சொல்லியவாறே குண்டூசியால் குத்திக் கொண்டார்.   

இதுவரை இருபத்தைந்து படங்களில் வில்லனாக நடித்துள்ள சத்யராஜின் முதல் படம், 'சட்டம் என் கையில்' . படப்பிடிப்பை வேடிக்கை பார்த்திருந்த இவரது தோற்றம் காமிரா மேன் என் .கே.விஸ்வநாதனையும், டைரக்டர் டி.ஏன்.பாலுவையும் சுண்டி இழுத்ததன் விளைவு?

திடிரென்று நடிகராகும் பாக்கியம் இவருக்குக்கிடைத்தது. ஆனால் சினிமா லைனில் இவருக்கு ஏதாவது ஒரு பொறுப்பில் பெயரெடுக்க வேண்டும் என்பது இவரது அந்தரங்க ஆசையாக  இருந்தது. சில மாதங்கள் தயாரிப்பாளர் திருப்பூர் மணியிடம் ப்ரொடெக்ஷன் மேனேஜராக பணியாற்றினார்.

மாடக்குளம் அழகிரிசாமியிடம் சிலம்பம் பயின்றுள்ள இவருக்கு கராத்தே தெரியும்.   

மணிவண்ணனின் 'நூறாவது நாள்'படத்தில் நடிக்கும் போதுதான் நாங்களிருவரும் கோவை கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜில் பி.யூ.சி வகுப்பில் ஒரே வருடத்தில படித்தது தெரிந்தது.என்கிறார் சத்யராஜ். 

வில்லனாக நடிப்பது சிரமமாக இல்லையா?

சிரமம்தான் என்றாலும் என்னைப்போன்ற இளைஞர் பெயரெடுக்க வேண்டுமானால் பாடுபட்டுதான் ஆக வேண்டும்.   

'தங்கைக்கோர் கீதம்' படத்தில் சிவகுமாரிடம் அவரின் தங்கையின் ஜாக்கெட்டை காட்டிப் பேசும் 'இதுக்குப் பேருதான் இங்கிலீஸ்ல பிளவுஸ்' என்கின்ற டயலாக் ரசிகர்களிடம் பாப்புலராக இருக்கிறது என்கிறார்.

அந்த சில நிமிடம், அன்பின் முகவரி, என்றும் பதினாறு, நீதியின் நிழல், எழுதாத சட்டங்கள் போன்ற ஒரு டஜன் படங்களில் சத்யராஜ் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்.

பேட்டி: மண்ணை சவுரிராஜன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.04.84 இதழ்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com