சாலையில் பள்ளம்...!

சென்னை அண்ணாநகர் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி மண்டலம் 8-இன் கீழுள்ள 102-ஆவது வட்டத்தில் 4 ரேஷன் கடைகள் உள்ளன.
சாலையில் பள்ளம்...!

சென்னை அண்ணாநகர் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி மண்டலம் 8-இன் கீழுள்ள 102-ஆவது வட்டத்தில் 4 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் பொருள்கள் வாங்குகின்றனர். பொருள்கள் கொண்டு செல்வதற்காக லாரிகள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இந்த இடத்தில் மழைநீர்க் கால்வாய் உடைந்து பெரிய பள்ளம் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் வர முடியாத சூழ்நிலை உள்ளது. வாகன விபத்துகள் நேரிடும் சூழ்நிலையும் உள்ளது. இப்பள்ளத்தை கான்கிரீட் போட்டு சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

செ.பழனி, அண்ணாநகர் கிழக்கு-102.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com