ஏரிகள் பராமரிக்கப்படுமா?

சென்னையின் புறநகர்ப் பகுதியான பல்லாவரம் தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்த பணியாகும். எனினும், அந்தப் பகுதியைச் சுற்றி ஏராளமான ஏரிகள் உள்ளன.

சென்னையின் புறநகர்ப் பகுதியான பல்லாவரம் தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்த பணியாகும். எனினும், அந்தப் பகுதியைச் சுற்றி ஏராளமான ஏரிகள் உள்ளன. அவற்றில் பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்குப் பிறகும் சில ஏரிகள் இன்றும் இருக்கின்றன. ஆனால், ஏரிகள் முறையாகப் பராமரிக்கப்படாததால், அவற்றில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்க்கட்டளை ஏரிகளைப் புனரமைக்க, கடந்த 2015-ஆம் ஆண்டில் ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அவற்றைப் புனரமைப்பது பல்லாவரம் நகராட்சியா அல்லது பொதுப்பணித் துறையா என்ற சர்ச்சையால் நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. மேலும், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள வீரராகவன் துணை ஏரி, நன்மங்கலம் ஏரி, செம்பாக்கம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, நெமிலிச்சேரி ஏரி, அஸ்தினாபுரம் ஏரி ஆகியவையும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. வறட்சி கடுமையாகியும் நீர்நிலைகளைக் காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?
வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com