பேருந்து வசதி தேவை...!

பேருந்து வசதி தேவை...! பட்டினப்பாக்கம் சீனுவாசபுரம் பகுதியிலிருந்து ஏராளமான பேர் பள்ளி, கல்லூரி, வேலைக்காக அடையார், திருவான்மியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவேண்டியுள்ளது.

பட்டினப்பாக்கம் சீனுவாசபுரம் பகுதியிலிருந்து ஏராளமான பேர் பள்ளி, கல்லூரி, வேலைக்காக அடையார், திருவான்மியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவேண்டியுள்ளது. ஆனால் இங்கிருந்து நேரடி பஸ் வசதி கிடையாது. இப்பகுதியில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், அடையாறு முகத்துவாரம் வரை பரவியுள்ளது. இது பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் முகத்துவாரம் பகுதி குடியிருப்புகளுக்கு பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் குழந்தைகளும் பெண்களும் முதியோரும் சிரமப்படுகின்றனர். எனவே இங்கிருந்து நேரடி பஸ் வசதியை ஏற்படுத்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முன்வரவேண்டும்.

பி. பிச்சை, பட்டினப்பாக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com