சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆவடி டியூப் புராடக்ட்ஸ் அருகே தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம் உள்ளது. இதன் வாயில் அருகே 2 மின்கம்பங்கள் சாலையில் உள்ளன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். இவற்றை மாற்றியமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.கனகவேல், ஆவடி.