மின் கம்பங்கள் மாற்றப்படுமா?

ஆவடி பெருநகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பல்லாயிரணக்கான மக்கள் வாழ்கின்றனர்.

ஆவடி பெருநகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பல்லாயிரணக்கான மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் பழுதடைந்து சிமென்ட் கான்கிரீட்டுகள் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்ற அளவிற்கு மோசமாக உள்ளன. அதிலும் குறிப்பாக ஏரிக்கரையின் ஓரமும்,  புதிதாக பூங்கா அமைக்கப்படும் இடத்தின் கடைசியிலும் தீயணைப்பு நிலையத்தின் அருகிலுள்ள எண்.3 கொண்ட  மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து கனமழை பெய்தாலோ, புயல் காற்று அடித்தாலோ சாலையில் கீழே விழுந்து உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் கம்பங்கள் மாற்றப்படுமா?
எஸ்.பழனி, அண்ணாநகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com