பகுதி - 530

பிறவி என்னும் துன்பம் ஓயோதோ

‘எனக்கு இது வேண்டும்’ என்று நான் நாடாததாகிய இந்தப் பிறவி என்னும் துன்பம் ஓயோதோ’ என முறையிட்டு இறைவனுடைய தரிசனத்தைக் கோரும் இந்தப் பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்று நீக்கி 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களிலுள்ள இரண்டு எழுத்துகளும் நெடில்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் உள்ள ஐந்தைந்து எழுத்துகளும் குறில்.  இந்தச் சீர்களில் மூன்றாவதாக அமைந்துள்ள வல்லொற்று எழுத்துக் கணக்கில் சேராதது.  இருப்பினும் இந்த வல்லின, மெல்லின ஒற்றுகள்தாம் தாளத்தின் திருப்புமுனையாக அமைவதைப் பார்க்கிறோம்.

தானா தனத்ததன தானா தனத்ததன
      தானா தனத்ததன                   தனதான

நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
         நாயே னரற்றுமொழி             வினையாயின்
      நாதா திருச்சபையி னேறாது சித்தமென
         நாலா வகைக்குமுன             தருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக் குழறி
         வாய்பாறி நிற்குமெனை          அருள்கூர
      வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
         வாரே னெனக்கெதிர்முன்         வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
         தோலா சனத்தியுமை            யருள்பாலா
      தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
         தோழா கடப்பமல                ரணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
         மேராள் குறத்திதிரு              மணவாளா
      ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
         ஈடேற வைத்தபுகழ்               பெருமாளே

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com