பகுதி -  538

இந்தப் பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.

அருவருப்பான செயல்களை ஒழித்து வடிவுள்ளதாகிய பேரின்பப் பொருளை உபதேசித்தருளவேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் நான்கு குற்றெழுத்துக்ளைக் கொண்டவை; இரண்டு, நான்கு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளைக் கொண்டவை; ஆறாவது சீர் மட்டும்—மூன்றெழுத்துகளையே கொண்டிருந்தாலும்—மூன்றாவது எழுத்து நெடிலாகவும் அதைத் தொடர்ந்து ஒரு வல்லொற்றுமாக அமையப்பெற்றவை. 

தனதன தனன தனதன  தனன
      தனதன தனனாத்                   தனதான

தறுகணன் மறலி முறுகிய கயிறு
         தலைகொடு விசிறீக்             கொடுபோகுஞ்
      சளமது தவிர அளவிடு சுருதி
         தலைகொடு பலசாத்             திரமோதி
அறுவகை சமய முறைமுறை சருவி
         யலைபடு தலைமூச்              சினையாகும்
      அருவரு வொழிய வடிவுள பொருளை
         அலம்வர அடியேற்               கருள்வாயே
நறுமல ரிறைவி யரிதிரு மருக
         நகமுத வியபார்ப்                பதிவாழ்வே
      நதிமதி யிதழி பணியணி கடவுள்                           
         நடமிடு புலியூர்க்                 குமரேசா
கறுவிய நிருதர் எறிதிரை பரவு
         கடலிடை பொடியாப்             பொருதோனே
      கழலிணை பணியு மவருடன் முனிவு
         கனவிலு மறியாப்                பெருமாளே.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com