பகுதி - 630

இறைவனை தியானிப்பதைக் கோரும்
பகுதி - 630

இறைவனை தியானிப்பதைக் கோரும் இந்தப் பாடல் திருமாணிகுழி என்னும் தலத்துக்கானது.  இத்தலம் திருப்பாதிரிப்புலியூருக்கு அருகே உள்ளது.

அடிக்கு 17 சீர்களும் ஒற்றொழித்து 40 எழுத்துகளையும் கொண்ட பாடல்.  (தொங்கல் சீரைத் தவிர்த்து) எல்லாச் சீர்களிலும் சமமாக மூன்று மூன்று எழுத்துகளே அமைந்திருந்தாலும், இந்த மூன்றெழுத்துகளின் அமைப்பு மாறுபாடு கொண்டதாக அமைந்திருக்கின்றது.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு வல்லெழுத்தோடு கூடிய மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு; ஆறு, எட்டு; பத்து, பன்னிரண்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக அமைந்துள்ளது.


தனத்த தானன தானான தானன
      தனத்த தானன தானான தானன
      தனத்த தானன தானான தானன தந்ததான

மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக
         நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி
         மணத்த வார்குழல் மாமாத ராரிரு கொங்கைமூழ்கி

மதித்த பூதர மாமாம னோலயர்
         செருக்கி மேல்விழ நாடோறு மேமிக
         வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் பண்டநாயேன்

பதித்த நூபுர சீர்பாத மாமலர்
         படைக்குள் மேவிய சீராவொ டேகலை
         பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் தங்குகாதும்

பணிக்க லாபமும் வேலோடு சேவலும்
         வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
         படைத்த வாகையு நாடாது பாழில்ம யங்கலாமோ

கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
         நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி
         கலக்கி யூர்பதி தீமூள வேவிடும் வஞ்சவேலா

களித்த பேய்கண மாகாளி கூளிகள்
         திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்
         கடித்த பூதமொ டேபாடி யாடுதல் கண்டவீரா

குதித்து வானர மேலேறு தாறுகள்
         குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்
         குலைக்கு மேல்விழ வேரேறு போகமும்   வஞ்சிதோயுங்

குளத்தி லூறிய தேனூறல் மாதுகள்
         குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
         குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு தம்பிரானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com