பகுதி - 724

சிதம்பரம் தலத்துக்கானது
பகுதி - 724

முற்றிலும் துதியாக அமைந்த இந்தப் பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; ஆறாவது சீரில் மட்டும் (கணக்கில் சேராத) ஒரு வல்லொற்று கூடுதலாகவும் பயில்கின்றன.


தனனதன தான தனனதன தான
      தனனதன தானத் தனதானா

கனகசபை மேவு மெனதுகுரு நாத
         கருணைமுரு கேசப் பெருமாள்காண்

கனகநிற வேத னபயமிட மோது
         கரகமல சோதிப் பெருமாள்காண்

வினவுமடி யாரை மருவிவிளை யாடு
         விரகுரச மோகப்                 பெருமாள்காண்

விதிமுநிவர் தேவ ருரருணகிரி நாதர்
         விமலசர சோதிப் பெருமாள்காண்

சனகிமண வாளன் மருகனென வேத
         சதமகிழ்கு மாரப் பெருமாள்காண்

சரணசிவ காமி யிரணகுல காரி
         தருமுருக நாமப் பெருமாள்காண்

இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
         டியல்பரவு காதற் பெருமாள்காண்

இணையிலிப தோகை மதியின்மக ளோடு
         மியல்புலியுர் வாழ்பொற் பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com