பகுதி - 482

உன்னுடைய தாமரைப் பாதத்தை

‘உன்னுடைய தாமரைப் பாதத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோருகிற இந்தப் பாடலும் விரிஞ்சிபுரத்துக்கானது.  இத்தலம் வேலூருக்கருகிலுள்ள காட்பாடியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறோம்.

அமைப்பு முறையில் ஒற்றொழித்து அடிக்கு 28 எழுத்துகளைக் கொண்ட பாடலிது.  1, 4, 7 ஆகிய சீர்கள் ஒற்றொழித்து மூன்றெழுத்துகளைக் கொண்டவை; 2, 5, 8 ஆகிய சீர்களில் ஒற்றொழித்து இரண்டெழுத்துகளும், இரண்டாம் எழுத்து மெல்லொற்றாகவும் அமைந்துள்ளது; 3, 6, 9 ஆகிய சீர்களில் மூன்றெழுத்துகள் பயில்கின்றன; முதலெழுத்து நெடிலாகத் தொடங்குகிறது.

தனன தந்த தானன  தனன தந்த தானன
      தனன தந்த தானன     -          தனதான

நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
         நெகிழ வந்து நேர்படு    -       மவிரோதம்
      நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
         நிருப அங்கு மாரவெ    -       ளெனவேதம்
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
         சமய பஞ்ச பாதக      -        ரறியாத
      தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
         சரண புண்ட ரீகம        -       தருள்வாயே
மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
         மறுகி வெந்து வாய்விட  -     நெடுவான
      வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு
         மடிய இந்தி ராதியர்     -       குடியேறச்
சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
         சிறுவ சந்த்ர சேகரர்    -        பெருவாழ்வே
      திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய
         திருவி ரிஞ்சை மேவிய  -      பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com