பகுதி - 614

என்னை ஆண்டருள்
பகுதி - 614


‘என்னை ஆண்டருள்’ என்று வேண்டுகின்ற இந்தப் பாடல் திருச்செந்திலுக்கானது. 

ஒரு குறில், ஒரு மெல்லொற்று, ஒரு நெடில் என்று இரண்டு இரண்டு எழுத்துகளால் அமைந்துள்ள ஆறு சீர்களையும் ஒரு தொங்கல் சீரையும் கொண்ட பாடல்.  அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டிருக்கிறது.  திரும்பத் திரும்பச் சுழன்று பயிலும் மெல்லொற்று இனிமையான சந்தத்தைத் தருகிறது.


தந்தா னந்தா தந்தா னந்தா
                தந்தா னந்தா தனதான

வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
               மென்பா கஞ்சொற் குயில்மாலை

மென்கே சந்தா னென்றே கொண்டார்
               மென்றோ ளொன்றப் பொருள்தேடி

வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
               வன்பே துன்பப் படலாமோ

மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
                வந்தே யிந்தப் பொழுதாள்வாய்

கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
                குன்றாள் கொங்கைக் கினியோனே

குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
                ரும்போய் மங்கப் பொருகோபா

கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
                கன்றே வும்பர்க் கொருநாதா

கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
                கந்தார் செந்திற் பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com