பகுதி - 590

வெள்ளிகரம் தலத்துக்கானது.

திருவடியைப் பெறக் கோரும் இந்தப் பாடல் அரக்கோணத்துக்கு வடக்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு சுமார் 16 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள வெள்ளிகரம் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட இப்பாடல், எல்லாச் சீரிலும் ஒத்தாற்போல ஒரு குறில், (கணக்கில் சேராத) ஒரு இடையின மெய், ஒரு குறில் என்ற எளிய அமைப்பைக் கொண்ட பாடல்.

தய்ய தய்ய தய்ய தய்ய
      தய்ய தய்ய                         தனதான                   

கள்ள முள்ள வல்ல வல்லி
         கையி லள்ளி                    பொருளீயக்
      கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு
         கல்வி செல்வர்                  கிளைமாய
அள்ளல் துள்ளி ஐவர் செல்லு
         மல்லல் சொல்ல                முடியாதே
      ஐய ரைய மெய்யர் மெய்ய
         ஐய செய்ய                      கழல்தாராய்
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு
         வள்ளி கிள்ளை                  மொழியாலே
      மைய லெய்து மைய செய்யில்
         வையில் வெள்வ                ளைகளேற
மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின்
         வெள்ள வெள்ளி                 நகர்வாழ்வே
      வெய்ய சைய வில்லி சொல்லை
         வெல்ல வல்ல                   பெருமாளே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com