பகுதி - 510

வெள்ளிகரம் என்னும் தலத்துக்கானது

இந்தப் பாடல் அரக்கோணத்துக்கு 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வெள்ளிகரம் என்னும் தலத்துக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதல் ஆறு சீர்களும் ஒற்றொழித்து இரண்டிரண்டு எழுத்துகளைக் கொண்டவை.  அத்தனையுமே குற்றெழுத்துகள்.  ஒவ்வொரு சீரிலும் கணக்கில் சேராத இரண்டாமெழுத்து இடையின மெய்யாக அமைந்துள்ளது.  இப்பாடலில் வல்லின மெய்கள் பயிலவில்லை.

தய்ய தய்ய தய்ய தய்ய
      தய்ய தய்ய                         தனதான

தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
         தொய்யு மைய                   இடையாலுந்
      துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல்
         சொல்லு கள்ள                   விழியாலும்
மைய செவ்வி மவ்வல் முல்லை
         மல்கு நல்ல                     குழலாலும்
      மையல் கொள்ள எள்ளல் செய்யும்
         வல்லி சொல்லை                மகிழ்வேனோ
செய்ய துய்ய புள்ளி நவ்வி
         செல்வி கல்வ                   ரையிலேனல்
      தெய்வ வள்ளி மையல் கொள்ளு
         செல்வ பிள்ளை                  முருகோனே
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய
         வெள்ளை வெள்ளி               நகர்வாழ்வே
      வெய்ய சைய வில்லி சொல்லை
         வெல்ல வல்ல                   பெருமாளே.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com