பகுதி - 556

சீகாழித் தலத்துக்கான இந்தப் பாடல்

“முத்தா முத்தீ அத்தா” என்ற முத்தாய்ப்பு அடியோடு முடிகிற பதினொன்று அல்லது பன்னிரண்டு பாடல்களில் சிலவற்றை இதற்கு முன்னரும் பார்த்திருக்கிறோம்.  சீகாழித் தலத்துக்கான இந்தப் பாடலும் அந்த வரிசையைச் சேர்ந்தது.

இவற்றின் சந்த அமைப்பு ஒன்றேபோலத்தான் இருக்கும்.  இப்பாடலிலும் அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகள்; ஒவ்வொரு சீரிலும் ஒற்றொழித்து இரண்டெழுத்துகள்; இவற்றில் முதலாவது குறில், இரண்டாவது நெடில்; கணக்கில் சேராத இரண்டாமெழுத்து வல்லொற்று.  ஆறாவது சீரில் மட்டும் கணக்கில் சேராத இரண்டாம், நான்காம் எழுத்துகள் இரண்டுமே வல்லொற்று.  பாடலைப் பார்ப்போம்.

தத்தா தத்தா தத்தா தத்தா
                தத்தா தத்தத்                                                                தனதான

கட்கா மக்ரோ தத்தே கட்சீ
        மிழ்த்தோர் கட்குக்                                           கவிபாடிக்
                கச்சா பிச்சா கத்தா வித்தா
                        ரத்தே யக்கொட்                                                 களைநீளக்
கொட்கா லக்கோ லக்கோ ணத்தே
                        யிட்டா சைப்பட்                                                 டிடவேவை
                கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே
                        னித்தீ தத்தைக்                                                   களைவாயே
வெட்கா மற்பாய் சுற்றூ மர்ச்சேர்
                        விக்கா னத்தைத்                                               தரிமாறன்
                வெப்பா றப்பா டிக்கா ழிக்கே
                        புக்காய் வெற்பிற்                                              குறமானை
முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய்
                        முற்சார் செச்சைப்                                           புயவீரா
                முத்தா முத்தீ யத்தா சுத்தா
                        முத்தா முத்திப்                                                  பெருமாளே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com