பகுதி - 568

இப்பாடல் கதிர்காமத்துக்கானது.

‘திருவடியைத் தந்தருள்வாய்’ என்று கோரும் இப்பாடல் கதிர்காமத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒரே அமைப்பைக் கொண்ட எல்லாச் சீர்களிலும் மூன்று எழுத்துகள்; அவற்றில் முதலிரண்டெழுத்தும் குறில்; மூன்றாவது எழுத்து நெடில்; கணக்கில் சேராத மூன்றாமெழுத்து வல்லொற்று.  மெல்லொற்றே பயிலாத பாடல்.

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
      தனத்தா தனத்தா                    தனதான

சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
         சமர்த்தா யெதிர்த்தே             வருசூரைச்
      சரிப்போ னமட்டே விடுத்தா யடுத்தாய்
         தகர்த்தா யுடற்றா                னிருகூறாச்
சிரித்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
         செகுத்தாய் பலத்தார்             விருதாகச்
      சிறைச்சே வ(ல்)பெற்றாய் வலக்கார முற்றாய்
         திருத்தா மரைத்தா               ளருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
         பொரத்தா னெதிர்த்தே            வருபோது
      பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
         பொரித்தார் நுதற்பார்             வையிலேபின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
         கருத்தார் மருத்தூர்               மதனாரைக்
      கரிக்கோ லமிட்டார் கணுக்கா னமுத்தே
         கதிர்கா மமுற்றார்               முருகோனே.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com