பகுதி - 670

அறிவு கலங்கி, மனம் ஒன்றாமல் அலைந்து திரிவதை

அறிவு கலங்கி, மனம் ஒன்றாமல் அலைந்து திரிவதை ஒழித்தருளவேண்டும் என்றும்; ‘எங்கேயிருந்து உன்னை அழைத்தாலும் அங்கே நீ என் முன்னே தோன்றியருள வேண்டும்’ என்றும் கோருகின்ற இந்தப் பாடல் திருச்செங்கோட்டுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதற் சீர், மூன்றாம் சீர், ஐந்தாம் சீர் ஆகியனவற்றில் இரண்டாவது எழுத்து நெடிலாக அமைந்த மூன்றெழுத்துகளும் கணக்கில் சேராத ஒரு மெல்லொற்றும்; இரண்டாம் சீர், நான்காம் சீர், ஆறாம் சீர் ஆகியனவற்றில் ஒரு மெல்லொற்றோடு கூடிய இரண்டு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தந்தான தந்த தந்தான தந்த  
      தந்தான தந்த தனதான

அன்பாக வந்து உன்றாள் பணிந்து
         ஐம்பூத மொன்ற நினையாமல்

அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
         ளம்போரு கங்கள் முலைதானும்

கொந்தேமி குந்து வண்டாடி நின்று
         கொண்டாடு கின்ற குழலாரைக்

கொண்டேநி னைந்து மன்பேது மண்டி
         குன்றாம லைந்து அலைவேனோ

மன்றாடி தந்த மைந்தாமி குந்த
         வம்பார்க டம்பை அணிவோனே

வந்தேப ணிந்து நின்றார்ப வங்கள்
         வம்பே தொலைந்த வடிவேலா

சென்றேயி டங்கள் கந்தாஎ னும்பொ
         செஞ்சேவல் கொண்டு வரவேணும்

செஞ்சாலி கஞ்ச மொன்றாய்வ ளர்ந்த
         செங்கோட மர்ந்த பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com