பகுதி - 744

உனது தரிசனத்தைத் தந்தருள வேண்டும்
பகுதி - 744

‘உனது தரிசனத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கேட்கின்ற இப்பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித் 14 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) ஒரு மெல்லொற்றும் ஒரு வல்லொற்றும் அமைந்துள்ளன.


தனதனன தனன தந்தத்                   தனதானா

இருவினையின் மதிம யங்கித்             திரியாதே
      எழுநரகி லுழலு நெஞ்சுற்            றலையாதே

பரமகுரு அருள்நி னைந்திட்                டுணர்வாலே
      பரவுதரி சனையை யென்றெற்       கருள்வாயே

தெரிதமிழை யுதவு சங்கப்                 புலவோனே
      சிவனருளு முருக செம்பொற்        கழலோனே

கருணைநெறி புரியு மன்பர்க்               கெளியோனே
      கனகசபை மருவு கந்தப்             பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com