பகுதி - 777

இயலிசையின் முத்தமிழோனே
பகுதி - 777

பதச் சேதம்

சொற் பொருள்

பகல் இரவினில் தடுமாறா

 

 

பதி குரு என தெளி போத

 

பதி: ஆண்டவன்; தெளிபோத: தெளிவு தரும் ஞான;

ரகசியம் உரைத்து அனுபூதி    

 

 

(இ)ரத நிலை தனை தருவாயே

 

ரத நிலை: இனிய நிலை;

இக பரம் அதற்கு இறையோனே     

 

 

இயல் இசையின் முத்தமிழோனே

 

 

சக(ம்) சிரகிரி பதி வேளே

 

 

சரவணபவ பெருமாளே.   

 

 

பகலிரவினில் தடுமாறா... பகல், இரவு* என்ற வேற்றுமை நிலைகளில் தடுமாற்றம் அடையாமல்,

(* பகல், இரவு என்ற பேதம் இல்லாத நிலையை,

வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.—என்று கந்தரலங்காரத்திலும் கேட்கிறார்.)

பதிகுருவெனத் தெளிபோத... (நீயே) ஆண்டவன், நீயே குரு என்று தெளிவடைகின்ற ஞானமயமான, ரகசியமுரைத்து... ரகசிய உபதேசத்தைத் தந்தருளி, அநுபூதி ரதநிலைதனைத் தருவாயே... அனுபூதியாகிய அனுபவ அறிவைத் தந்தருள வேண்டும்.

இகபரமதற்கு இறையோனே... இவ்வுலகுக்கும் அவ்வுலகுக்கும் இறைவனாகத் திகழ்பவனே!

இயலிசையின் முத்தமிழோனே... இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்குக்கு உரியவனே!

சகசிரகிரிப் பதிவேளே... இந்தச் சகத்தில் சிரகிரி எனனப்படும் திரிசிரா மலை என்னும் பதியில் வீற்றிருக்கின்ற வேளே!

சரவணபவப் பெருமாளே.... சரவணப் பொய்கையில் உதித்த பெருமாளே!

சுருக்க உரை

இம்மை மறுமை என்னும் இரண்டுக்கும் இறைவனே! இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் உரியவனே!  சிரகிரியில் வீற்றிருப்பவனே!  சரவணப் பொய்கையில் உதித்த பெருமாளே!

பகல், இரவு என்ற பேதங்களில் நான் தடுமாறாலும்; நீயே ஆண்டவன், நீயே குரு என்ற தெளிவைத் தருகின்ற ஞானமாகிய ரகசிய உபதேசத்தை அருளி அடியேன் அனுபூதி நிலையில் நிற்கும் இனிய நிலையைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com