03.12.1984: உலகை உலுக்கிய போபால் விஷ வாயு கசிவு சம்பவம் நிகழ்ந்த நாள் இன்று!

சரியாக 32 வருடங்களுக்கு முன்பு,இதே நாளில் மத்திய  பிரதேச மாநிலம் போபாலில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் பல்லாயிரக்கணக்கான பேர் உயிரிழந்த தினம் இன்று
03.12.1984: உலகை உலுக்கிய போபால் விஷ வாயு கசிவு சம்பவம் நிகழ்ந்த நாள் இன்று!

சரியாக 32 வருடங்களுக்கு முன்பு,இதே நாளில் மத்திய  பிரதேச மாநிலம் போபாலில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் பல்லாயிரக்கணக்கான பேர் உயிரிழந்த தினம் இன்று.

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் ஆண்டர்சன் என்பவருக்கு சொந்தமான யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது.     இந்த தொழிற்சாலையில் 03.12.1984 அன்று அதிகாலையில் 'மீத்தைல் ஐசோ சயனேட்' எனும் நச்சு வாயு  கசிந்தது.

இந்த விபரீத விபத்தினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் அந்த வாயுவின் பாதிப்பால் இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். மேலும் 8,000 பேர் இந்த வாயு பாதிப்பின் பின் விளைவுகளால் உண்டான நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

'போபால் பேரழிவு' என்று அழைக்கப்படும் இந்த பேரழிவானது உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது.

இந்த விபத்தினால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய 1993 ஆம் ஆண்டு அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவக்குழு ஆணையம் ஒன்று இங்கே ஏற்படுத்தப்பட்டது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com