டிசம்பர் 29 - சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

ஒவ்வொருஆண்டும் டிசம்பர் 29-ஆம் தேதி சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
டிசம்பர் 29 - சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்
Published on
Updated on
1 min read

ஒவ்வொருஆண்டும் டிசம்பர் 29-ஆம் தேதி சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உயிர் வகையினங்களின் தாங்கும் அல்லது நிலைக்கும் தன்மை என்பது அவற்றின் மரபணுப் பண்புகளைப் பாதுகாப்பதிலே அடங்கி இருக்கிறது. பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க இதுவரை சர்வதேச அளவில் நான்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகவங்கி, ஐக்கிய நாடுகள் முன்னேற்றத் திட்டக்குழு ஆகிய இரண்டும் இணைந்து 1990ல் உலகளாவிய சுற்றுச்சூழல் மையம் ஒன்றை ஆரம்பித்தது. மூன்று வருட காலத்திற்கு முன்மாதிரி திட்டமாக இதை நடத்தி வந்தது.

நாற்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் உள்ள அரசாங்க மற்றும் அரசுசார நிறுவனங்களை ஒன்றிணைத்து சர்வதேச பல்லுயிர் பெருக்க பாதுகாப்புச் செயல்பாட்டுத் திட்டம் வரையப்பட்டுள்ளது.

உலக இயற்கை பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டக்குழு ஆகியன.

உலக பல்லுயிர் பெருக்க உடன்பாடு 1992ம் வருடம் பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனிரோவில் நடத்தப்பட்ட மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த உடன்பாட்டின் மூலம் உலகளாவிய வகையில் பல்லுயிர் பெருக்கத்தை உபயோகிக்க, தொழில் நுட்பங்களை பரிமாற்றங்கள் செய்து கொள்ள, பாதுகாப்புத் திட்டங்களை வரைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தவிர சர்வதேச அளவில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் நிதி வசதிகள் செய்து தரவும் திட்டங்கள் வரையப்பட்டுள்ளது.

இவற்றை நினைவு கூறவே டிசம்பர் 29-ஆம் தேதியன்று சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com