அக்டோபர் 28: சர்வதேச அனிமேஷன் தினம்!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28-ஆம் தேதி சர்வதேச அனிமேஷன் தினமாக கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 28: சர்வதேச அனிமேஷன் தினம்!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28-ஆம் தேதி சர்வதேச அனிமேஷன் தினமாக கொண்டாடப்படுகிறது.

அசையும் படங்களை கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்பட வகையானது ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவையா இருந்தாலும், தற்போது எல்லா தரப்பு மக்களின் விருப்பமாக திகழ்கிறது.ஒன்றாக திகழ்கிறது.

அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பனியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக “சர்வதேச அனிமேஷன் தினம்” கொண்டாடப்படுகிறது.

28.10.1892 அன்று சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் கிரெவின் மியூசியத்தில் முதன் முதலில் திரையறங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவு கூறும் விதமாக இந்த சர்வ தேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது.

யுனெஸ்கோவின் ஒரு அங்கமாக திகழும் சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம், 2002-ஆம் ஆண்டில் முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தியது.

இந்நாளன்று உலகின் பல பகுதிகளில், அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை ஊக்குவிக்கும் விதமாக, புதிய அனிமேஷன் குறும்படங்கள் மற்று திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com