09.06.1949: இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண் பேடி பிறந்த தினம் இன்று!

கிரண் பேடி ஓய்வு பெற்ற காவலரும், ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார்.
09.06.1949: இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண் பேடி பிறந்த தினம் இன்று!

கிரண் பேடி ஓய்வு பெற்ற காவலரும், ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார். இவர் தில்லி, கோவா  மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார்.

1971ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர் இவர். 1993இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது, திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றது. 1994ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரசு வழங்கும் ரமோன் மக்சேசே விருது பெற்றவர்.

2007ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார். பின்னர் இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015இல் இணைந்தார்.2016 ஆம் ஆண்டு மே 29 இல் புதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுநராகப் பொறுப்பேற்ற இவர், அதற்பொழுது அப்பதவியில் இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com