11.06.1947: புகழ்பெற்ற இந்திய அரசியல்வாதி லாலு பிரசாத் யாதவ் பிறந்த தினம் இன்று!

லாலு பிரசாத் யாதவ் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார்.
11.06.1947: புகழ்பெற்ற இந்திய அரசியல்வாதி லாலு பிரசாத் யாதவ் பிறந்த தினம் இன்று!

லாலு பிரசாத் யாதவ் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார். இராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர். மத்திய ரயில்வே துறை அமைச்சராகவும் பணியாற்றினார். . 14ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 15ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

ஊழல் வழக்கின் காரணமாக லாலு பிரசாத் யாதவ் வழக்கின் மூலம் தன் முதல்வர் பதவியை இழக்க நேரிட்ட போது அவரின் மனைவியை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து ஆட்சி செய்தார்.

கடந்த தேர்தலில் லாலுவின் அரசியல் வாழ்கையை முடிவுக்கு கொண்டுவர நினைத்த அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றமே அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் தனக்கு பரம எதிரியாக காணப்பட்ட நிதிஷ்குமாருடன் இவர் கூட்டணி வைத்தது தான். அதில் சிறப்பு என்னவென்றால் நிதிஷ் கட்சியை விட அதிக தொகுதிகளை வென்ற லாலு கட்சி முதல்வர் பொறுப்பை விட்டுகொடுத்து தான். தற்போதையாய் பீகார் அரசில் லாலுவின் மகன் துணை முதல்வர் ஆகா உள்ளார்.

லாலுவை பீகாரின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம். இவர் மீது எதிர்கட்சிகள் பல்வேறு குற்றங்களை சுமத்தினாலும் பீகார் மக்கள் இவரை ஹீரோவாக தான் பார்க்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com