06.03.1926: பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குனர் கே. சங்கர் பிறந்த தினம் இன்று!

சங்கர் ஆரம்ப காலகட்டங்களில் ஏ.வி.எம் ல் எடிட்டராக தனது சினிமா உலகில் இருந்தார். பின்னர் இயக்குனாரானார்
06.03.1926: பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குனர் கே. சங்கர் பிறந்த தினம் இன்று!

சங்கர் ஆரம்ப காலகட்டங்களில் ஏ.வி.எம் ல் எடிட்டராக தனது சினிமா உலகில் இருந்தார். பின்னர் இயக்குனாரானார். இவர் இயக்கிய முதல் படம் சிங்களத்தில் “டாக்டர்” என்னும் படமாகும். பின்னர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள கே.சங்கர், இணையற்ற வெற்றிப் படங்கள் பல தந்து தமிழ்த் திரைப்பட உலகில் தனி முத்திரை பதித்தவர் ஆவார்.

கே.சங்கர் இயக்கிய குடியிருந்த கோயில், அடிமைப் பெண், ஆலய மணி, ஆண்டவன் கட்டளை, கைராசி, சந்திரோதயம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மனத்தில் என்றென்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும் திரைக் காவியங்கள் ஆகும். இவர் தமிழில் மட்டுமன்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி  மொழித் திரைப்படங்களையும் இயக்கிய சிறப்புக்கு உரியவர் ஆவார்.

கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்.டி.ராமராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பல வெற்றிப் படங்களை இயக்கி உள்ளது இவரது தனிச் சிறப்பாகும்.

மானில அரசால் வழங்கப்படும் கலை வித்தகர் விருதான – ராஜா சாண்டோ விருதை – கே.சங்கர் பெற்றுருக்கின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com