22.03.2005; நடிகர் 'ஜெமினி' கணேசன் இறந்த தினம் இன்று

ஜெமினி கணேசன் தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார்.
22.03.2005; நடிகர் 'ஜெமினி' கணேசன் இறந்த தினம் இன்று

ஜெமினி கணேசன் தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெமினி கணேசன் 17 நவம்பர் 1920 அன்று தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் இராமசுவாமி ஐயர், கங்கம்மா இணையருக்குப் பிறந்தவர்.  அவரது சினிமா வரலாறு மிஸ் மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.

அவருக்கு பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் "காதல் மன்னன்" என்றே அழைத்தனர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.

உடல்நலக்குறைவால் அவர் 22.03.20005 அன்று சென்னையில் காலமானார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com