13.05.1648: தில்லி செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட தினம் இன்று!

முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638 ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார்,
13.05.1648: தில்லி செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட தினம் இன்று!

முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638 ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார், பத்து  ஆண்டுகள் கழித்து 1648 ஆம் ஆண்டு இந்தக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இந்த செங்கோட்டையானது  உண்மையில், "குயிலா-ஐ-முபாரக்" (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது, ஏனெனில் இது அரசக்குடும்பங்களின் வசிப்பிடமாக இருந்தது.

செங்கோட்டையின் தளவரைபடமானது சலிம்கர் கோட்டையின் தளத்துடன் ஒருங்கிணைத்து அமையும்படி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோட்டையானது, இடைக்கால வரலாற்று நகரமான ஷாஜகானாபாத்தின் முக்கிய மையமாக இருந்தது. பேரரசர் ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த செங்கோட்டையின் செயல்திட்டம் மற்றும் அழகியல், முகலாயர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்துகின்றது. இந்த கோட்டை கட்டப்பட்ட பிறகு, பல மேம்பாடுகள் பேரரசர் ஷாஜகானால் செய்யப்பட்டது.

இந்த கோட்டையின் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் ஔரங்கசீப் காலத்திலும் அதற்குப்பிறகு வந்த முகலாயர்களின் ஆட்சிகாலத்திலும் நடந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் 1857 ஆம் ஆண்டில் முதல் சுதந்திரப்போர் முடிவுற்ற பின்பு, இந்த இடத்தின் ஒட்டுமொத்த அமைப்புகளில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் வெளிக்கொணரப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்தக்கோட்டை முக்கியமான இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்பட்டது, மேலும் சுதந்திரம் அடைந்த பின்னரும் 2003 ஆம் ஆண்டு வரையில் இந்த கோட்டையின் முக்கியமான பகுதி இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com