மே 17- உலக தொலைத்தொடர்பு தினம்

1865இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் International Telecommunication Union (ITU) என்னும் அமைப்பானது உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது.
மே 17- உலக தொலைத்தொடர்பு தினம்

1865இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் International Telecommunication Union (ITU) என்னும் அமைப்பானது உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது.

மனித குலத்துக்கு தோலை தொடர்பு என்னும் சாதனம் ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. ஆண்டு தோறும் கொண்டாடப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தின் முக்கிய நோக்கமானது தொலைத்தொடர்பு நாட்டின் அபிவிருத்திற்கும் மனிதாபிமான வளர்ச்சிக்கும் உதவுதல் பற்றி எடுத்துக் காட்டுவதே ஆகும்.

மனிதனின் தகவல் தொடர்புகள், செய்மதிப் பரிமாற்றம், கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு, கலை வெளிப்பாடு, வர்த்தகம், முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகின்றது. சூறாவளிகள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும், போர்மூட்டம், பாதுகாப்பு, தொற்றுநோய் போன்ற சந்தர்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முதற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது.

நிவாரண நடவடிக்கைகளைக்கூட இன்று நடமாடும் கம்பியில்லாத் தொலைபேசி மூலம் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com