ஜன்னல் நிலவு : கவிஞர் இரா .இரவி

அமாவாசையன்றும் தோன்றும் ஜன்னல்  நிலவுஅந்த எதிர் விட்டு நிலவிற்கு விடுப்பே இல்லை !சூரியன் ஒளியை வானத்து நிலா பிரதிபலிக்கும்  சுந்தரியின்   ஒளியை  சுந்தரன் பிரதிபலிக்கின்றேன் !வானத்து நிலாவால் அல்லி மலர் மலரும்வஞ்சி என்ற நிலாவால் நான் மலர்கிறேன் !வானத்து நிலவோ தினமும் ஒரு வடிவம் வஞ்சி அவளோ தினமும் ஒரே வடிவம் !இரவில் மட்டுமே  தெரியும் வான் நிலா பகலிலும் இரவிலும் தெரியும் நிலா அவள் !முழு நிலவாய் என்றும் அழகாய்  ஒளிர்பவள் முகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி அவள் !ஒரே ஒரு பார்வைதான் ஜன்னல் வழியே ஒரு நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும் !இதழ்கள் அசைத்து எதுவும் பேசாவிட்டாலும் விழி வழி அனைத்தும் பேசி விடுகிறாள் கள்ளி !சில நிமிட தரிசனம் கிடைக்காது போனால் சிந்தை அது பற்றியே நினைத்து சோகமடையும் !சிக்கி முக்கி  கற்கள் உரசினாள் தீ வரும் செல்வியின் பார்வை உரசினாள் காதல் வளரும் !மகிழ்ச்சியாக பார்வைக் கணை வீசினால் மனசு மகிழ்ச்சியில் பொங்கி வழியும் !விடுமுறையின்றி தினமும் வரும் ஜன்னல் நிலவு வன்முறையின்றி என்னை வாழ வைக்கும் நிலவு !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com