தூரத்தில் கேட்குது: கவிஞர் இரா. இரவி

பாறை வெடிக்கும் சத்தம் தூரத்தில் கேட்கிறது
பாறைகளை ரொட்டியென வெட்டுவது முறையோ?

இயற்கையை அழித்து வெட்டி எடுத்து தினமும்
இயன்றளவு ஏற்றுமதி செய்து மகிழ்கின்றனர்!

மலைகளை மலைகளாக இருக்க விடுங்கள்
மலைகளைத் தகர்த்திட நீயும் தகர்வாய்!

இயற்கையை அழித்து அழித்து கோபம் ஊட்டினால்
இயற்கையை ஒருநாள் உன்னை அழிக்கும் உணர்க!

பல மலைகளை முழுங்கி விட்டனர் மகாதேவன்கள் 
சில மலைகளையாவது சிதைக்காமல் காப்போம்!

பணம்  வருகிறது என்பதற்காக கொள்ளையர்கள்  நாளும் 
பழம்பெரும் மலைகளை தகர்த்துத் தரைமட்டம் ஆக்கினர்!

மலையைத் தகர்த்த மர்மத்தை வெளியிட்டவரை
மாற்றி விட்டனர் வகித்திட்ட பதவியிலிருந்து!

குற்றம் செய்ததற்காக சிறை தண்டனை தந்தால்
குற்றத்தை சிறையிலும் செய்து மாட்டுகின்றனர்!

திருந்தி விடு மனிதா குற்றம் புரிவோரே
திருந்தாவிடில் விரைவில் திருத்தப்படுவீர்கள்!

ஒரே ஒரு மலையை உன்னால் உருவாக்க முடியுமா?
உருவான இயற்கை மலையை சிதைப்பது சரியோ?

வெடி வைத்து தகர்க்கின்றாய் மலைகளை
வேதனையில் வீழ்த்துகின்றாய இயற்கை ஆர்வலரை !

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனிமேல்
நடப்பவை நல்லதாக இருக்கட்டும் திருந்திடு!

இயற்கையை அழித்திடும் உரிமை மனிதனுக்கு இல்லை
இயற்கையை நேசித்து வாழ்ந்திடு மனிதா!

இயற்கை தான் உனக்கு எல்லாம் தருகின்றது
இயற்கை இருந்தால் தான் நீயும் இருப்பாய்!

இனி ஒரு விதி செய்வோம் வாருங்கள்
இனி ஒரு மலையையும் தகர்க்காமல் காப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com