மறு ஜென்மம்: கவிஞர் இரா .இரவி 

Updated on
1 min read

மறுஜென்மம் என்பது  உண்மை இல்லை 
மறுபடி மறுபடி  சொல்லி  வந்த பழைய பொய்!

மதிமிக்க அறிஞர்கள் பலர் அறிவித்தனர் அன்றே 
மறுஜென்மம் என்பதில் நம்பிக்கை இல்லை என்று!

பிறப்பும் இறப்பும் யாவருக்கும் ஒரேஒரு முறைதான் 
பேதலிக்க வேண்டாம் யாரும் மறுபிறவி குறித்து!

மறுபிறவி என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை 
மறுபடி மறுபடி சொல்வதால் உண்மையாகாது!

ஏழுபிறவி என்று எழுதியதும் கற்பனைதான் 
எவருக்கும் மறு பிறப்பு இல்லை என்பதே உண்மை!

ஒருவர் இறந்தால் மறுபடி பிறப்பார் என்றால் 
உலகில் பிறப்பும் இறப்பும் சமமாகவா உள்ளன!

மனிதராக அல்ல விலங்காகப் பிறப்பர் என்பர் 
மனிதனின் அபாரக் கற்பனையே இக்கதைகள்!

பாவம் செய்யாதிருக்க பயமுறுத்தப்பட்டதுதான் 
பாவம் செய்யாதிருப்போம் மனசாட்சிக்குப் பயந்து!

மதம் பரப்ப வந்தவர்களின் போலிப் பரப்புரை  
மறுஜென்மம் என்பதே புரட்டின் உச்சம்!

மறுபிறவி வேண்டாமென்று பலர் பிராத்தனையில் 
மனம் உருகி வேண்டுதல் செய்வோரும் உண்டு ! 

போன பிறவியில் நான் இப்படி அப்படியென 
பொய்யுரை  அள்ளி விடுவோரும் உண்டு !

மறுஜென்மம் என்பதை  விஞ்ஞானம்  ஏற்கவில்லை  
மறுஜென்மம் என்பதை விஞ்ஞானிகளும் ஏற்கவில்லை !

பிழைப்பிற்காக  மறுஜென்மம் கதையளப்போர் 
படம் எடுத்து பணம் ஈட்டுவோரும் உண்டு !

பிறப்பு எல்லோருக்கும் ஒரேயொரு முறைதான் 
பிறந்ததன் பயனை நிறைவேற்றுவோம் நன்முறையே !

வள்ளுவர் உரைத்தது போலவே எல்லோரும் 
வாழ்வாங்கு வாழ்ந்து பிறவியைச் செம்மையாக்குவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com