கல்வீச்சு: கவிஞர் இரா .இரவி

அகிம்சைவாதி  காந்தியடிகள் விரும்பியதில்லை 
அன்பை விரும்புவோர் விரும்பியதில்லை கல்வீச்சு !

பலரின் தலையைப்  பதம் பார்க்கும் கல்வீச்சு 
பாவம் அப்பாவிகளும் காயம் அடைவதுண்டு !

மரத்திலிருக்கும் மாங்காய் விழ வேண்டுமென்று 
மரம் மீது சிறுவர்கள் கல் வீசுவதும் உண்டு !

தவறு எதுவும் செய்யாத முதியோர் குழந்தை மீது 
தவறி கல் விழுந்து காயம் அடைந்ததுண்டு !   

கல்வீச்சால்  உயிர் இழந்தவர்களும் உண்டு 
கல் என்பதும் கொடிய ஆயுதமே உணர்க !
  
கல்வீச்சால் பேருந்துகள் தாக்கப்படும் அவலம் 
கணினி யுகத்திலும் தொடர்வது அவலம் !

பொது சொத்தான அரசுப் பேருந்தை 
பொது மக்களே தாக்குவது மடமை !

கல்வீச்சால்  அதிகம் உடைவது கண்ணாடியே 
கண்ணாடி உருவாக்கும் கடினம் உணர்க !

எதையும் உடைப்பது எளிது அதனை 
உருவாக்குவதுதான் கடினம் உணர்க !

அமைதியாக ஊர்வலம் செல்வோர் உண்டு   
அதிலிருந்து கல்வீசும் விசமிகளும் உண்டு   !

ஊர்வலத்தின் மீது குறி வைத்துக் கல்வீசி 
ஊர்வலத்தைக்  கலைக்கும் விசமிகளும் உண்டு   !

சிலர் சொந்த வெறுப்பை மனதில் வைத்து 
சில கடைகள் மீதும் கல் வீசுவதுண்டு !

மக்கள் காவலர்கள் மீது வீசினாலும் 
மக்கள் மீது காவலர்கள்  வீசினாலும் குற்றமே !

காட்டுமிராண்டிக் காலத்துப் பழக்கம் கல்வீச்சு
கணினி யுகத்தில்  மனிதனுக்கு அழகல்ல !

புதிதாய் திறக்கும் மதுக்கடை மீதும் மக்கள் 
பொங்கி எழுந்து கல்வீசித் தாக்குகின்றனர் !

ஆளும் அரசே அனைத்து மதுக்கடைகளையும் 
அறிவிப்பால் மூடிவிட்டால் கல் வீச்சு இருக்காது !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com