உறுதிப்பூக்கள் - ஜீவா காசிநாதன் கவிதை

உறுதிப்பூக்கள் - ஜீவா காசிநாதன் கவிதை


பேரன்பின் பெருங்கடலாய்
மானும் மயிலுமாய்
பூக்களும் பட்டாம்பூச்சியுமாய்
அருவியும் தென்றலுமாய்
விளங்குகின்றன இவ்வரங்கில்
அதன் புகழ்பாட வந்தேன்
சிரியோனை பொறுப்பீர் முன்னம்...

பெண்ணாய் பிறந்ததேயென
சலித்தோரின்
துயர் துடைத்த கரங்கள்
நம் பெண்கள்...

அன்போடு அழகு கூட்டி
பண்போடு பாசம் வளர்த்து
அறிவோடு குறும்புகள் செய்து
கலாச்சாரத்தின் காவலாய்
குடும்பத்தின் குல விளக்காய்
குறையாத வளம் சேர்க்கும்
தெய்வத்தின் பிறவிகள்
நம் கண்மணிகள்

உயிர் தந்தாய்
உணவு தந்தாய்
அரவணைத்தாய்
ஆம் பெண்ணே நீயே கடவுள்

கல்நெஞ்சம் மனிதர்களை
புனிதப்படுத்தும்
உறுதிப் பூக்கள்

இனிய குரல் கேட்டால்
இளமையாகிறேன்
பார்வை பட்டால் மென்மையாகிறேன்
என்னவொரு அதிசயம்
நீ பெண்ணே

கள்ளமில்லாத
உன் சிரிப்பில்
உருகுவதில்
ஐஸ்கிரீமை மிஞ்சுகிறோம்

சுவாதியும் ஹாசினியும்
இழந்தது போதும்
இனி ஒரு விதி செய்வோம்

அழகின் அழகே
இனி நீ
அறிவை தீட்டு

பொறுமையின் பெருங்கடலே
வீரம் கொள்.
மௌனத்தின் மாமலையே
புயலாய் மாறு
பணிவின் பிறவியே
துணிவு கொள்

உடை திருத்து
தற்காப்பு பயில்
அச்சம் தவிர்
உச்சம் தொடு.

- ஜீவா காசிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com