டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை! (வீடியோ)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இங்கிலாந்து வீரர்...
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை! (வீடியோ)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர், 500-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பிறகு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 52.5 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 71 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2-ம் நாளின் முடிவில் 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. 

பிராத்வெயிட்டின் விக்கெட்டைக் கைப்பற்றிய 35 வயது ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இங்கிலாந்து வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 

டெஸ்ட்: அதிக விக்கெட்டுகள்

முரளிதரன் - 800 (133 டெஸ்டுகள் )
வார்னே - 708 (145)
கும்ப்ளே - 619 (132)
மெக்ராத் - 563 (124)
வால்ஷ் - 519 (132)
ஆண்டர்சன் - 501 (129) 

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் - இங்கிலாந்து

ஆண்டர்சன் - 501 (129 டெஸ்டுகள்)
பிராட் - 387 (109)
போத்தம் -  383 (102)  

500-வது விக்கெட்டை எடுத்த வருடம்

வால்ஷ் - 2001
வார்னே - 2004
முரளி - 2004
மெக்ராத் - 2005
கும்ப்ளே - 2006
ஆண்டர்சன் - 2017

ஆண்டர்சன்

முதல் 50 டெஸ்டுகள் - 181 விக்கெட்டுகள்
அடுத்த 50 டெஸ்டுகள் - 203 விக்கெட்டுகள்
கடைசி 28 டெஸ்டுகள் - 113 விக்கெட்டுகள்

ஆண்டர்சன்

உள்நாட்டில் - 75 டெஸ்டுகள் - 326 விக்கெட்டுகள்
வெளிநாடுகளில் - 53 டெஸ்டுகள் - 171 விக்கெட்டுகள்

அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கொண்ட சமகால கிரிக்கெட் வீரர்கள் (ஓய்வு பெறாதவர்கள்)

501 ஆண்டர்சன்
417 ஸ்டெய்ன், ஹர்பஹன் சிங்
389 ஹெராத்
386 பிராட்
292 அஸ்வின்

லார்ட்ஸ் மைதானத்தில் ஆண்டர்சன் எடுத்த விக்கெட்டுகள்

முதல் விக்கெட்
50-வது விக்கெட்
300-வது விக்கெட்
350-வது விக்கெட்
500-வது விக்கெட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com